செயிரி வாரம்
'க்ளீன் ஸ்ரீ லங்கா (ஊடநயn ளுசடையமெய)' தேசிய வேலைத்திட்டத்துக்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக 'செயிரி வாரம்' செயற்படுத்தல்.
பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் சுற்றறிக்கை 22ஃ2025 க்கு அமைய செப்ரெம்பர் மாதம் 01 திகதி தொடக்கம் 04 திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் செயிரி வாரத்துக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் எமது கல்குடா வலயக்கல்வி அலுவலகத்திலும் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளிலும் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.வு.அனந்தரூபன் அவர்களின் ஆலோசனைகளுக்கமைய 'செயிரி வார' வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
செயிரி வாரத்துக்கான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டு கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் கிளைத்தலைவர்கள் (டீசயnஉh ர்நயனள) ஊடாக செயற்படுத்துவதற்கான செயற்பட்டுத் திட்டம் (யுஉவழைn Pடயn) வகுக்கப்பட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் 'செயிரி' வார வேலைத்திட்டங்கள் தொடங்குவதற்கு முதல் வாரத்தில் அழைக்கப்பட்டு 5ளு முறைமை தொடர்பிலும் அதில் முதலாவது ளு குறித்து நிற்கும் 'செயிரி' தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டு 'செயிரி' வார வேலைகள் திட்டமிடப்பட்டன.
'செயிரி' வாரத்தின் முதல் நாளில் வலயக்கல்விப் பணிப்பாளர் அனைத்து உத்தியோத்தர்கள் முன்னிலையில் செயிரி வார வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் உரையாற்றியதுடன் வேலைத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து செப்ரெம்பர் 04 திகதி வரை 'செயிரி' வார வேலைத்திட்டங்கள் கிளைத்தலைவர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டன. அத்தோடு பின் தொடர் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாடசாலைகளில் அதிபர்களின் தலைமையில் 'செயிரி' வார வேலைகள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.






